என்னுடைய முதல் ப்ளாக்கில் என் குரு நாதரை பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... என்னுடைய ப்ளாக்கின் நோக்கம் வித்தியாசமான மனிதர்களை பற்றி எழுதுவது தான் என்பதால் அவரை பற்றி எழுதுவது தவறல்ல என்றே நினைக்கிறேன்.
இவர் என் குரு நாதர் மட்டும் அல்ல, நல்ல ஆசான், அருமையான நண்பன், சகோதரன் என்று அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மிக சிறந்த மனிதன் . அவரை சந்தித்து அவருடன் பழகும் வாய்ப்பை பெற்றவர் அனைவர் மனதிலும் மரியாதைக்குரிய ஒரு இடத்தை தனக்கென்று பிடித்தவர். (பில்ட் அப் போதும் என்று நினைக்கிறேன்)
கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். பல வேலைகள் கிடைத்தது. எல்லாம் கால் சென்டர் அல்லது BPO வேலைகள். எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை. ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். ஒரு பெரிய கம்பெனியில் இன்டெர்வியு. போய் பார் என்றான் நண்பன். உன்னால் முடியும் என்றாள் காதலி(இப்போது மனைவி).
சென்றேன். கணேஷை சந்தித்தேன். அவருக்கு என்னை பிடித்து விட்டது. வேலையில் சேர்ந்தேன். அதற்கு அடுத்த நாட்களில் ஒரு மேலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை அவரை பார்த்து தெரிந்து கொண்டேன். அவரின் சில குணாதிசயங்கள்
- துளி பந்தா கிடையாது
- ஒரு விஷயம் நமக்கு தெரிய விட்டால் 100 தடவை கூட சலிப்பில்லாமல் சொல்லி தருவார்
- அவருக்கு ஏதாவது தெரிய வில்லை என்றால் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் எங்களிடம் கேட்டு தேர்ந்து கொள்ள யோசிக்க மாட்டார்
- எப்போதும் படித்து/ வாசித்து தன்னை upgrade செய்து கொள்ளும் மனிதர்
- மேலாண்மை பாடங்களை கரைத்து குடித்தவர்
- ஒரு வேலையை செய் என்று இரு முறை கூறுவார், செய்யவில்லை என்றால் அவரே செய்து விடுவார்
- அதற்கு பயந்தே அவர் சொல்லும் வேலைகள் எல்லாம் உடனே செய்யபட்டு விடும்
- எல்லாம் நன்மைக்கே என்பதை பெரிதும் நம்புவார்
- எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் டென்ஷன் ஆகாமல் தீர்ப்பார்
- அவரை பற்றி எழுதுவதற்கே தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் (ஆனால் தனி நபர்களை புகழ்வது என் ப்ளாக்கின் நோக்கம் அல்ல. இந்த இடுகையில் அது கொஞ்சம் அதிகமாக இருந்தால் மன்னிக்கவும். அடுத்த இடுகையில் திருத்தி கொள்கிறேன்)
அவருடன்/அவரிடம் வேலை செய்த அந்த இரண்டரை வருடங்களில் கிடைத்த அனுபவம், மார்க்கெட்டிங் துறையில் 10 வருடம் வேலை செய்து கிடைக்கும் அனுபவத்திற்கு சமம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
என் professional வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக அந்த இரண்டரை வருடங்களை கருதுகிறேன். மிகவும் நன்றி கணேஷ் சார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக