சனி, 6 நவம்பர், 2010

நாகர்கோயில் நகைச்சுவை

நான் பள்ளி கூடங்களில் டிஜிட்டல் கன்டென்ட் விற்கும் ஒரு மார்க்கெட்டிங் மேனேஜர். நண்பர் ஒருவர் ஒரு நபரின் நம்பரை கொடுத்து, இவரை சென்று பாருங்கள் என்று refer செய்தார். நான் அவருடன் அலைபேசியில்/கைபேசியில்/செல்பேசியில் {செல்போன் என்று சொல்வது வசதியாகத்தான் இருந்தது) பேசினேன். 
சார், உங்களுக்கு ஸ்கூல் இருப்பதாக என் நண்பர் கூறினார். உங்கள் ஸ்கூலில் டிஜிட்டல் கன்டென்ட் போடுவது தொடர்பாக உங்களை சந்திக்க விரும்புகிறேன் என்று கூறினேன். ஆமாம் எங்களிடம் பெரிய ஸ்கூல் இருக்கிறது, நீங்கள் நேரில் வாருங்கள் என்று கூறினார். 
நான் இருப்பதோ சென்னையில் அவர் இருப்பதோ திருநெல்வேலி என்றார். சரி என்று அடுத்த வாரத்தில் திருநெல்வேலிக்கு ஒரு டூர் போட்டேன். அவர் மட்டுமல்லாது வேறு சில ஸ்கூல்களையும் பார்க்க திட்டமிட்டேன். திருநெல்வேலி சென்றவுடன் அவருக்கு ஒரு போன் செய்தேன். 
சார் உங்களை எங்கே வந்து சந்திக்க வேண்டும் என்று கேட்டேன். திருநெல்வேலியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடம் சொன்னார். (நாகர்கோயில் பக்கம் என்று முதலிலேயே சொல்லி இருக்கலாம்)
ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு நாகர்கோயில் தாண்டி திருவனந்தபுரத்திற்கு சற்று முன்னதாக ஒரு இடத்தில அவரை சந்தித்தேன். என்னுடைய productஇன் சிறப்பம்சங்களை எல்லாம் கூறி முடித்த பின் சொன்னார் 
"நீங்கள் சொல்வது எல்லாம் அற்புதமாக இருக்கின்றது, அனால் என்னிடம் உள்ள ஸ்கூலில் இன்ஜினியரிங் தான் சொல்லி கொடுக்கிறோம்" என்றார். எனக்கு புரிய வில்லை.
பின்னர் அவர் சொன்னார் "நாங்கள் இன்ஜினியரிங் collegeஐ தான் ஸ்கூல் என்று சொல்வோம் என்றார். எனக்கு மயக்கமே வந்து விட்டது. இந்த மனிதர் ஸ்கூல் என்று சொன்னதை நம்பி 600 கிலோமீட்டர் வந்த என்னை நினைத்து சிரிப்பதா இல்லை அழுவதா என்றே எனக்கு தெரியவில்லை. 

நீங்களே சொல்லுங்கள்....................

வெள்ளி, 5 நவம்பர், 2010

முதல் ப்ளாக்

என்னுடைய முதல் ப்ளாக்கில் என் குரு நாதரை பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... என்னுடைய ப்ளாக்கின் நோக்கம் வித்தியாசமான மனிதர்களை பற்றி எழுதுவது தான் என்பதால் அவரை பற்றி எழுதுவது தவறல்ல என்றே நினைக்கிறேன்.

இவர் என் குரு நாதர் மட்டும் அல்ல, நல்ல ஆசான், அருமையான நண்பன், சகோதரன் என்று அடுக்கி கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மிக சிறந்த மனிதன் . அவரை சந்தித்து அவருடன் பழகும் வாய்ப்பை பெற்றவர் அனைவர் மனதிலும் மரியாதைக்குரிய ஒரு இடத்தை தனக்கென்று பிடித்தவர். (பில்ட் அப் போதும் என்று நினைக்கிறேன்)

கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். பல வேலைகள் கிடைத்தது. எல்லாம் கால் சென்டர் அல்லது BPO வேலைகள். எனக்கு ஏனோ அதில் உடன்பாடு இல்லை. ஒரு சிறிய கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். ஒரு பெரிய கம்பெனியில் இன்டெர்வியு. போய் பார் என்றான் நண்பன். உன்னால் முடியும் என்றாள் காதலி(இப்போது மனைவி).

சென்றேன். கணேஷை சந்தித்தேன். அவருக்கு என்னை பிடித்து விட்டது. வேலையில் சேர்ந்தேன். அதற்கு அடுத்த நாட்களில் ஒரு மேலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை அவரை பார்த்து தெரிந்து கொண்டேன். அவரின் சில குணாதிசயங்கள்
  • துளி பந்தா கிடையாது
  • ஒரு விஷயம் நமக்கு தெரிய விட்டால் 100 தடவை கூட சலிப்பில்லாமல் சொல்லி தருவார்
  • அவருக்கு ஏதாவது தெரிய வில்லை என்றால் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் எங்களிடம் கேட்டு தேர்ந்து கொள்ள யோசிக்க மாட்டார் 
  • எப்போதும் படித்து/ வாசித்து தன்னை upgrade செய்து கொள்ளும் மனிதர்
  • மேலாண்மை பாடங்களை கரைத்து குடித்தவர்
  • ஒரு வேலையை செய் என்று இரு முறை கூறுவார், செய்யவில்லை என்றால் அவரே செய்து விடுவார் 
  • அதற்கு பயந்தே அவர் சொல்லும் வேலைகள் எல்லாம் உடனே செய்யபட்டு விடும்
  • எல்லாம் நன்மைக்கே என்பதை பெரிதும் நம்புவார் 
  • எவ்வளவு பெரிய சிக்கல் வந்தாலும் டென்ஷன்  ஆகாமல் தீர்ப்பார்
  • அவரை பற்றி எழுதுவதற்கே தனி ப்ளாக் ஆரம்பிக்கலாம் (ஆனால் தனி நபர்களை புகழ்வது என் ப்ளாக்கின் நோக்கம் அல்ல. இந்த இடுகையில் அது கொஞ்சம் அதிகமாக இருந்தால் மன்னிக்கவும். அடுத்த இடுகையில் திருத்தி கொள்கிறேன்)
அவருடன்/அவரிடம் வேலை செய்த அந்த இரண்டரை வருடங்களில் கிடைத்த அனுபவம், மார்க்கெட்டிங் துறையில் 10 வருடம் வேலை செய்து கிடைக்கும் அனுபவத்திற்கு சமம் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

என் professional வாழ்வில் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக அந்த இரண்டரை வருடங்களை கருதுகிறேன். மிகவும் நன்றி கணேஷ் சார்.

Ennai patri

என்னை பற்றி-
நான் ஐடி நிறுவனம் (பள்ளிகள் பயன்படுத்த கூடிய/வேண்டிய சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம்) ஒன்றின் மார்க்கெட்டிங் பிரிவில் பணி செய்கிறேன்.

எனது பணியை மிகவும் நேசிக்கிறேன்.

பணியின் நிமித்தம், நாள் தோறும் பல்வேறு மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். சிலர் அறிவாளிகள், சில மிக நல்ல மனிதர்கள், பல நல்ல கல்வியாளர்கள், வெகு சில (கல்வியாளர் என்கிற முகமுடியை அணிந்திருக்கும்) கொள்ளைகாரர்கள், சில முட்டாள்கள், பல சிந்தனையாளர்கள், இன்னும் பல்வேறு தரப்பட்ட மனிதர்கள். இவர்களை பற்றிய சில விஷயங்களை, இவர்களுடனான என் அனுபவங்களை இந்த ப்ளாகில் எழுத விரும்புகிறேன்.



பின் குறிப்பு: 
நான் ப்ளாகிற்கு புத்தம் புதிது. எப்படி ப்ளாக் செய்ய வேண்டும் என்று ப்ளாக் அனுபவம் உள்ளவர்கள் கற்று தரவும். உங்கள் கமெண்டுகள் எனக்கு பெரும் உதவியாய் இருக்கும்.

naai Pozhappu

நாய் பொழப்பு- மார்க்கெட்டிங் துறையில் நான் சந்திக்கும் நபர்களை பற்றிய எனது பதிவு....